கூகுள் மேப்பில் உள்ள கோடுகளுக்கான அர்த்தம்!

கூகுள் மேப்ஸ் (Google Maps) என்பது தற்போது ஸ்மார்ட்ஃபோன் யூசர்களின் மிகவும் அத்தியாவசியமான கருவிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு புதிய நகரத்திற்கு செல்வதாக இருக்கட்டும் அல்லது நீங்கள் அன்றாடம் செல்லும் வழியில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு முயற்சி செய்வதாக இருக்கட்டும், பலர் இந்த கூகுள் மேப்ஸ் அப்ளிகேஷன் வழங்கும் ரியல் டைம் அப்டேட்களையும், சாலை வழிகாட்டுதல்களையும் நம்பி இருக்கின்றனர்.
ஆனால், கூகுள் மேப்ஸில் நீங்கள் பச்சை, சிவப்பு, மஞ்சள், நீலம், ஊதா மற்றும் பழுப்பு நிற கோடுகள் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? இதற்கான அர்த்தம் என்ன என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
பலர் இந்த நிறங்கள் அப்ளிகேஷனின் வடிவமைப்பில் ஒரு பகுதி என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், அது அப்படி கிடையாது. இதில் உள்ள ஒவ்வொரு நிறமும் போக்குவரத்து மற்றும் சாலை வழி தகவல் பற்றிய முக்கியமான விஷயத்தை வெளிப்படுத்துகின்றன. இதனை தெரிந்து கொள்வது உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
கூகுள் மேப் மூலம் நிலத்தின் விவரங்களை அறியலாம்.. எப்படி தெரியுமா?.. தமிழக அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்!
பச்சை நிற கோடுகள்: சுமுகமான பயணம்: கூகுள் மேப்ஸில் உள்ள உங்களுடைய வழியில் பச்சை நிற கோடு தெரிந்தால் சாலையில் எந்த ஒரு போக்குவரத்து நெரிசல் இல்லை என்று அர்த்தம். எனவே, நீங்கள் சுமூகமாக எந்த ஒரு தடங்கல்களும் இல்லாமல் விரைவாக பயணிக்கலாம்.
மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறக் கோடுகள்: மிதமான போக்குவரத்து நெரிசல்: மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற கோடுகள் இருப்பது சாலையில் மிதமான போக்குவரத்து நெரிசல் இருப்பதை பரிந்துரை செய்கிறது. இதனால் உங்களுடைய பயணம் சற்று தாமதம் ஆகலாம். ஆனால், பெரிய அளவில் எந்த ஒரு தாமதமும் ஏற்படாது, இந்த வழியை தாராளமாக நீங்கள் எடுத்துச் செல்லலாம் என்பதே இதற்கு அர்த்தம்.
இப்போது உங்கள் வீடு கூகிள் மேப்ஸில் தெரியும், நீங்களே பதிவு செய்யுங்கள். – லங்காசிறி நியூஸ்
சிவப்பு நிற கோடுகள்: அதிகப் போக்குவரத்து நெரிசல்: சிவப்பு நிற கோடு இருப்பது ஒரு எச்சரிக்கையை குறிக்கிறது. அதிகமான போக்குவரத்து நெரிசல் இதற்கான அர்த்தம். மேலும் சிவப்பு நிறம் அதிக டார்க்காக இருக்கும் பட்சத்தில் அது அளவுக்கு அதிகமான போக்குவரத்து நெரிசலை குறிக்கிறது. ஒருவேளை நீங்கள் அவசரமாக எங்கும் செல்ல வேண்டிய நிலை இருந்தால் மாற்று வழியை தேர்ந்தெடுப்பது நல்லது.
நீங்க போற இடமெல்லாம் கூகுள் மேப்பிற்கு தெரியுதா..? இனி அந்த கவலை இல்லை..இந்த விஷயத்தை தெரிஞ்சுகோங்க..! – News18 தமிழ்Online courses
நீல நிற கோடு: உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் வழி: கூகுள் மேப்ஸில் உங்களுடைய பயணத்தை நீங்கள் ஆரம்பித்தவுடன் நீங்கள் ஆரம்பிக்கும் இடத்திலிருந்து சேரும் இடத்திற்கான பரிந்துரைக்கப்பட்ட வழியை ஒரு நீல நிற கோடு மூலமாக இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு வழங்கும். இது நீங்கள் சரியான பாதையை பின்பற்றுவதற்கு உதவும்.
ஊதா நிற கோடு: ஓரளவு போக்குவரத்து நெரிசல் கொண்ட மாற்று வழி: ஒரு சில நேரங்களில் கூகுள் மேப்ஸ் ஊதா நிற கோட்டை காட்டும். இது மாற்று வழி அல்லது நீளமான வழியை குறிக்கும். இதில் ஓரளவு போக்குவரத்து நெரிசல் இருக்கலாம். வழக்கமாக இது முதன்மையான வழியில் இருக்கக்கூடிய போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக காட்டப்படுகிறது.
பழுப்பு நிறக் கோடு: மலை அல்லது உயரமான பகுதி: ஒருவேளை கூகுள் மேப்ஸில் பழுப்பு நிற கோடு இருப்பதை கவனித்தால் நீங்கள் செல்லும் வழியில் மலை அல்லது உயரமான பகுதி இருப்பதற்கான அறிகுறி அது. உங்களுடைய பாதையில் ஏற்படக்கூடிய இந்த மாற்றத்தை இதன் மூலமாக நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
எனவே, கூகுள் மேப்ஸில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த பல்வேறு நிற கோடுகளை புரிந்து கொள்வதன் மூலமாக எந்த ஒரு தாமதங்களையும் தவிர்த்து, சாலை நிலைகளை புரிந்துகொண்டு, பயணம் சம்பந்தப்பட்ட நல்ல முடிவுகளை எடுக்கலாம். அடுத்த முறை கூகுள் மேப்ஸை பயன்படுத்தும்போது இந்த நிறங்களை உங்களுடைய ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களுடைய ஸ்மார்ட்டான டிராவல் அசிஸ்டன்டாக நிச்சயமாக இருக்கும்.