UKவில் கேள்விக்குறியாகும் சிறுபான்மை மக்களின் வாழ்க்கை முறை!
பிரித்தானியாவில் சிறுபான்மை இனக் குடிமக்களின் வாழ்க்கை கடினமாகி வருவதாக புதிய சமத்துவ கண்காணிப்புக் குழுவின் தலைவரான டாக்டர் மேரி-ஆன் ஸ்டீபன்சன் (Dr Mary-Ann Stephenso) தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் சமீபகாலமாக புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்ற நிலையில் அவரின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
அத்துடன் மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய மாநாட்டிலிருந்து (ECHR) இங்கிலாந்து வெளியேறுவது தவறான கொள்கை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மனித உரிமைகள் வழக்குகள் குறித்த தவறான ஊடக செய்திகளையும் அவர் விமர்சித்துள்ளார்.
நாடுகடத்தலை எளிதாக்க மனித உரிமைகள் சட்டத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வரும் அதே வேளையில், ஐரோப்பிய கவுன்சில் இடம்பெயர்வு சவால்களை நிவர்த்தி செய்யவும் அரசாங்கம் ஆய்வு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





