ஜெர்மனியில் வாடகை வீடுகளில் வாழ்பவர்களுக்கு அமுலாகும் சட்டம்!
ஜெர்மனி நாட்டில் வாடகை குடியிருப்பாளர்களின் நலன் கருதி சட்டம் ஒன்று நாடாளுமன்றத்தில் இயற்றப்படவுள்ளது.
ஜெர்மனியின் பாராளுமன்றமானது வாடகை குடியிருப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய வாடகை குடியிருப்பாளர்கள் சட்டம் ஒன்றை இயற்றவுள்ளதாக தெரியவந்திருக்கின்றது.
அண்மை காலங்களில் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் பல இன்னல்களுக்கு முகம் கொ டுப்பதாக தெரியவந்துள்ளது.
அதாவது வாடகை வடு வழங்கும் பொழுது வீட்டு சொந்த காரர்கள் வீடுகளுக்கு தளபாடங்களை போட்டு பின்னர் இந்த வீடுகளுடைய வாடகையை உயர்வாக கணிப்பதாக தெரிய வந்திருக்கின்றது.
சாதாரணமாக ஒரு வீட்டினுடைய வாடகை விட 14 சதவீதமான வாடகை அதிகரிப்பு காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
இவ்வகையான வீடுகளுக்கு தளபாடுகளை வைத்து பெறும் தொகை அதிகரிப்பு காணப்படுவதால் வீட்டில் குடியிருப்பவர்களுக்கு பாரிய அசொளகரிகங்கள் ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
இதன் நலனை கருத்தில் கொண்டு இவ்வகையான நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு புதிய சட்டத்தை இயற்றவேண்டிய சூழ்நிலை உள்ளதாக ஆளும் கூட்டு கட்சியின் பிரதான கட்சியான எஸ் பி டி கட்சியுடைய பொது செயலாளர் ரூனட் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார்.
ஒக்ஸ்வோட் எக்கனமிக் என்று சொல்லப்படுகின்ற அமைப்பு மேற்கொண்ட கருத்து கணிப்பில் பல இவ்வகையான முறைகேடுகள் நடைபெற்று வருகின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.