பிரித்தானியாவில் ஏழை, செல்வந்தர்களிடையே பாகுப்பாடு காட்டும் தொழிற்கட்சி அரசாங்கம்!
2024 ஆம் ஆண்டு தொழிற்கட்சி ஆட்சியமைத்ததில் இருந்து பிரித்தானியாவில் உள்ள ஏழ்மையான குடும்பங்களின் விருப்ப வருமானம் 2.1% குறைந்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
மாறாக, மிகவும் வசதியான குடும்பங்கள் அதே காலகட்டத்தில் தங்கள் விருப்ப வருமானத்தில் 10.3% உயர்வை அனுபவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது பிரித்தானியாவில் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகளை அடிகோடிட்டு காட்டுகிறது.
பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் ( Sir Keir Starmer) அதிகரித்துள்ள வாழ்க்கை செலவுகளுக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
எரிசக்தி செலவுகளைக் குறைத்தல், இரண்டு குழந்தைகள் நலன் உச்சவரம்பை ஒழித்தல் மற்றும் அரை மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்காக இலவச பாடசாலை உணவை விரிவுபடுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் நெருக்கடியை நிவர்த்தி செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தொழிலாளர் கட்சியானது தனது சொந்த கட்சி உறுப்பினர்களிடையே மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





