9 பேர் பந்து வீசியதற்கான காரணத்தை வெளியிட்ட இந்திய அணித் தலைவர்
2023ஆம் ஆண்டுக்காக உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இந்த தொடரின் சுற்றுப்போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அரையிறுதி போடிக்கு முறையே இந்தியா ,தென் ஆபிரிக்கா ,அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
முதலாவது அரையிறுதி போட்டி நாளை இடம்பெறவுள்ள நிலையில், இந்திய மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன .
இரண்டாவது அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியா அணி தென்னாபிரிக்காவை எதிர்கொள்கிறது.
இதேவேளை, நெதர்லாந்து அணியுடனான போட்டியில் எல்லோரையும் பந்து வீச வைத்தது ஏன்? என்பது குறித்து ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில் ”இது போன்ற சில விடயங்களை செய்து பார்க்க வேண்டும் என எங்கள் மனதில் இருந்தது. இதுபோன்ற வாய்ப்புகளை அணியில் உருவாக்க விரும்பினோம். தற்போது எங்கள் அணி 9 பேர் பந்து வீசும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்த விளையாட்டில் நாங்கள் சில விடயங்களை முயற்சி செய்து பார்த்தோம். வேகப்பந்து வீச்சாளர்கள் புதுவித யுக்திகளை பயன்படுத்தி பந்து வீசினார்கள். இது தேவையில்லை. என்றாலும் அவர்கள் செய்து பார்த்தார்கள்” என குறிப்பிட்டார்.
நெதர்லாந்து அணியுடனான போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
ரோஹித் சர்மா சுமார் ஏழு வருடங்கள் கழித்து பந்து வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.