இலங்கைக்காக 300 கோடி ரூபாயை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கிய இந்திய அரசாங்கம்!
2025 ஆம் ஆண்டுக்கான இந்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது இலங்கை மதிப்பில் சுமார் 1,032 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, இந்திய பட்ஜெட்டில் இலங்கைக்கு 245 மில்லியன் இந்திய ரூபாய்கள் ஒதுக்கப்பட்டன.
இருப்பினும், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இந்த முறை 300 மில்லியன் இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
2025 ஆம் ஆண்டிற்கான இந்திய பட்ஜெட்டை நேற்று (01) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அந்த பட்ஜெட்டில், இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு 20,516 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, அதில் 5,483 கோடி ரூபாய் வெளிநாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்திய பட்ஜெட்டில் வெளிநாடுகளுக்கு ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகை 2,150 கோடி இந்திய ரூபாயாகும்.
அந்தப் பணம் பூட்டானுக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு, இந்திய பட்ஜெட்டில் பூட்டானுக்கு 2,068 மில்லியன் இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் மேலும் சுட்டிக்காட்டின.