வரதட்சணை கேட்டு மனைவியை கிணற்றில் தள்ளிய கணவன்..! கைது செய்த பொலிஸார்
 
																																		இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை கிணற்றில் தள்ளிய கணவரை பொலிஸார் கைது செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகேஷ். இவர் தனது மனைவியிடம் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு மனைவியை கயிற்றில் கட்டி, கிணற்றில் தள்ளி சித்ரவதை செய்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்து 25 நாட்களுக்குப் பின்னர் தான் தெரிய வந்துள்ளது. ஆனால், இந்த சித்ரவதை செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போதுதான் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை கணவர் ராகேஷ் தனது மொபைலில் வீடியோவாக எடுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் தந்தை பொலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
புகாரையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய பொலிஸார் இந்த வீடியோ ஆதாரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
        


 
                         
                            
