ஆசியா

உலகின் மிகப் பெரிய செல்வந்த நாடான ஹாங்காங்கின் மறைக்கப்பட்டுள்ள கறுப்பு பக்கம்!

ஹாங்காங் 7.5 மில்லியன் மக்களைக் கொண்ட மிகப் பெரிய பணக்கார நகரங்களில் ஒன்றாகும்.

வணிக மையமாக அறியப்படும் இந்நகரம், பொருளாதார வளர்ச்சிக்காக செல்வந்தர்களையும், திறமையான நபர்களை ஈர்க்கிறது.

இப்படியான செல்வந்த நகரத்தில் அமைந்துள்ள சில குடியுருப்புக்கள் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளன. அதாவது சவப்பெட்டி அளவிலான சிறிய குடியிருப்புகள் அங்கு வறுமையில் வாடுபவர்களையும் அம்பலப்படுத்தியுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், 200,000 மக்கள் வாழ்ந்த இந்த சிறிய வீடுகளின் படங்கள் வெளிவந்துள்ளன.

குளிர்சாதன பெட்டிகள் மற்றும் மைக்ரோவேவ் போன்ற உபகரணங்கள் உட்பட அனைத்து வகையான பொருட்களையும் இருபுறமும் குவித்து வைத்து அதற்கிடையில் உறங்கி எழுவதை காட்டும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சைய ஏற்படுத்தியது.

அறைகள் தோராயமாக 24 அங்குல அகலமும் (60cm) மற்றும் 67 அங்குல நீளமும் (170cm) இருக்கும்.

ஆனால் இடவசதி இல்லாத போதிலும், ஒரு மாதத்திற்கு HK$2,400 – அல்லது சுமார் £240- வரை மக்களிடம் வசூலிக்கப்படுகிறது.

தூய்மை மற்றும் தீ பாதுகாப்பு இல்லாததால் அறைகள் தங்கள் குடியிருப்பாளர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியது. இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை அகற்றுவதற்கு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டாலும் சவப்பெட்டி அளவிலான குடியிருப்புகளில் தாக்கத்தை செலுத்தாது என்றே கூறப்படுகிறது.

 

(Visited 15 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!