இந்தியாவில் பிரமாண்டமாக இடம்பெறும் மகா கும்பமேளா நிகழ்வு : ஒன்றுக்கூடிய மில்லியன் கணக்கான யாத்ரீகர்கள்!
உலகின் மிகப் பெரிய திருவிழாவான மகா கும்பமேளா இந்தியாவில் ஆரம்பமாகியுள்ளது.
அடுத்த 45 நாட்களில், சுமார் 400 மில்லியன் இந்து யாத்ரீகர்கள் வடக்கு மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் ஒன்றுக்கூடவுள்ளனர்.
மகா கும்பமேளா என்பது இந்துக்களுக்கு மிகவும் புனிதமான யாத்திரைகளில் ஒன்றாகும், மேலும் இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது.
இது கங்கை மற்றும் யமுனை நதிகளின் கரையிலும் இரண்டு ஆறுகள் சந்திக்கும் இடத்திலும் நடத்தப்படுகிறது.
யாத்ரீகர்களுக்கு, மகா கும்பமேளா சுய-உணர்தல், சுத்திகரிப்பு மற்றும் ஆன்மீக ஞானம் ஆகியவற்றின் அடையாளப் பயணமாக கருதப்படுகிறது.
கும்பமேளாவிற்காக 10,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் மகாகும்பமேளா மாவட்டம் அமைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்களை தங்க வைக்க 160,000 க்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுமார் 400 கி.மீ (248.5 மைல்கள்) தற்காலிக சாலைகள் மற்றும் இரண்டு ஆறுகளின் மீது 30 பாண்டூன் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், மின்சார துணை நிலையங்கள், காவல் நிலையங்கள், சுத்தமான நீர் விநியோக பாதைகள், 150,000 கழிப்பறைகள் மற்றும் 200 கி.மீ க்கும் மேற்பட்ட கழிவுநீர் பாதைகளும் கட்டப்பட்டுள்ளன.