நவீன பீரங்கிகளை வாங்கி குவிக்கும் பிரான்ஸ் அரசாங்கம்

பிரான்ஸில் 109 புதிய தலைமுறை சீசர் பீரங்கிகளை Nexter எனும் நிறுவனத்திடம் இருந்து அரசாங்கம் வாங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொத்தமாக 350 மில்லியன் யூரோக்கள் செலவில், இந்த பீரங்கிகள் வாங்கப்படவுள்ளது.
இந்த நிறுவனமானது பிரான்ஸ்-ஜேர்மன் இணை நிறுவனமாகும்.
ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் குறித்த 155 மில்லிமீற்ற அகலமான ’ஆறு’ குண்டுகளை 40 கிலோ மீற்றர் தூரத்துக்கு இலக்கு வைத்து தாக்கும் வல்லமை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரெஞ்சு இராணுவத்தினரிடம் இருந்த 76 சீசர் பீரங்கிகளை உக்ரேனுக்கு பிரான்ஸ் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 12 times, 1 visits today)