இலங்கை செய்தி

திசைக்காட்டியின் முதல் தோல்வி!  

ஹம்பாந்தோட்டை – அங்குனுகொலபெலஸ்ஸ, 09ஆம் இலக்கம் கூட்டுறவு பிரதேசத் தேர்தலில், திசைக்காட்டி சின்னத்திலான தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான பாராளுமன்றத் தேர்தல் மற்றும் கூட்டுறவுத் தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்று வந்த தேசிய மக்கள் சக்தி, இம்முறை அங்குனுகொலபெலஸ்ஸ கூட்டுறவுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளமை, அக்கட்சி மீதான மக்களின் அதிருப்தி கொஞசம் கொஞ்சமான வெளிப்படுத்தப்படுவதையே காட்டுகிறது என்று, அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, ஒரு சுயாதீனக் குழுவே, அங்குனுகொலபெலஸ்ஸ கூட்டுறவு அதிகாரத்தை பலப்படுத்தியுள்ளது.

இவ்வாறாக, சுயேட்சைக் குழு பெற்றுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 ஆகும்.

அந்தச் சுயேட்சைக் குழு பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 143 ஆகும்.

தேசிய மக்கள் சக்தி, 128 வாக்குகளைப் பெற்றது. சம்பந்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 284 என்றும் அங்கிகரிக்கப்படாத வாக்குகளின் எண்ணிக்கை 13 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் நேற்று முன்தினம் (10) நடைபெற்றது.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை