இந்தியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய திருவிழா – 06 பேர் கைது செய்யப்பட்டனர்
வட இந்தியாவில் டெல்லிக்கு தென்கிழக்கே உள்ள ஹத்ராஸ் கிராமத்தில் சிவ திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 06 பேரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் கடந்த 2ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், முதற்கட்டமாக 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் மருத்துவமனை வளாகத்தில் 121 சடலங்கள் கிடைத்ததாகவும், மேலும் ஏராளமானோர் சுவாசக் கோளாறு மற்றும் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இந்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஹத்ராஸ் கிராமத்தில் தற்காலிக கூடாரத்தில் சிவபெருமானுக்கு சிறப்பு கலாச்சார விழா நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த இடத்தில் அதிகபட்சமாக 5000 பக்தர்கள் நுழைய முடியும் என்றாலும், அந்த நேரத்தில் சுமார் 15000 பக்தர்கள் அதிக அளவில் பூஜையில் சேர்ந்துள்ளனர்.
வழிபாடு முடித்து வெளியே வர முயன்ற 121 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
எவ்வாறாயினும், தரமற்ற மற்றும் முறைசாரா முறையில் இவ்வாறான அபாயகரமான திருவிழாவை ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக் குழுவின் ஆறு பேர் மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.