மலேசியாவுக்குள் நுழைய முயன்ற இலங்கை குழுவினருக்கு நேர்ந்த கதி

மலேசிய-தாய்லாந்து எல்லை வழியாக மலேசியாவிற்குள் நுழைய முயன்றபோது, இலங்கையர்கள் உட்பட 12 பேர் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுய்யளர்.
இந்தக் குழுவில் 8 இலங்கை ஆண்கள், ஒரு இலங்கைப் பெண் மற்றும் மூன்று தாய்லாந்து பெண்கள் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாதது, தேவையான தங்கும் காலத்தை கடைபிடிக்காதது மற்றும் கேள்விக்குரிய பயண நோக்கங்கள் காரணமாக அவர்கள் எல்லை வழியாக மலேசியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
நுழைவை மறுத்த நாட்டின் அதிகாரிகள், அவர்களை உடனடியாக தங்கள் நாடுகளுக்குத் திரும்ப உத்தரவிட்டுள்ளனர்.
இந்தக் குழு குற்றவாளிகளாக அடையாளம் காணப்படாததாலோ அல்லது அமலாக்க விசாரணைகளுக்கு உட்படுத்தப்படாததாலோ கைது செய்யப்படவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.