உலகம் செய்தி

தனது Followers களை அடிமையாக வைத்திருந்த இன்ஸ்டா பிரபலத்திற்கு நேர்ந்த கதி

இன்ஸ்டா பிரபலம் கேட் டோரஸிற்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வலைதள பக்கத்தில் தன்னை பின் தொடர்ந்த இருவரை வீட்டில் அடிமையாக வைத்திருந்த வழக்கில் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் ‘டைட்டானிக்’ பட நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவுடன் டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்பட்டவர் பிரேசிலை சேர்ந்த முன்னாள் மாடலும், இன்ஸ்டா பிரபலமுமான கேட் டோரஸ். இவர் போதைப் பொருள்களை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இவர் தனது சமூக வலைதள பக்கங்களின் மூலம் உடற்பயிற்சி, ஆரோக்கியம், தியானம் உள்ளிட்டவை குறித்து தன்னை பின் தொடர்பவர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தார்.

இந்த சூழலில் சமூக வலைதளத்தில் இவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு பெண்கள் கடந்த 2022ம் ஆண்டு மாயமானர். இதனையடுத்து FBI இது குறித்து விசாரணை நடத்தி, மாயமான பெண்களை தேடி வந்தது. தொடர் விசாரணையில், இன்ஸ்டா பிரபலம் கேட் டோரஸ் மாயமான இரண்டு பெண்களை அடிமையாக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து கேட் டோரஸ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து கேட் டோரஸ் மீது ஆள் கடத்தல், அடிமைப் படித்தல் உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டு, அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேட் டோரஸ் அந்த இரண்டு பெண்களையும், வீட்டில் வளர்க்கும் விலங்குகளை கவனித்துக் கொள்வதற்கும், சமைப்பதற்கும், துணிகளை துவைப்பதற்கும், வீட்டை சுத்தம் செய்வதற்கும் பயன்படுததியுள்ளார். மேலும் அவர்களுக்கு அதற்கான ஊதியத்தை வழங்கவும் மறுத்துள்ளார். அந்த இரண்டு பெண்களும் ஒருவருக்கொருவர் பேசுவதற்கும் அவர் அனுமதிக்காமல் இருந்துள்ளார்.

மேலும் அவர்கள் இருவரும் சில மணி நேரம் மட்டுமே தூங்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து டோரஸ் அவர்கள் இருவரையும், கிளப்பில் பணிபுரிய வற்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர். மேலும், அந்த இரண்டு பெண்களும் இதிலிருந்து மீள மனநல சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

 

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!