பிரான்ஸில் முன்னாள் கணவரால் பெண்ணுக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் Pontault-Combault (Seine-et-Marne) நகரில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில் வைத்து பெண் ஒருவர் கத்தியினால் குத்தப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
39 வயதுடைய பெண் ஒருவர் வாங்கிக்கொண்டு சுப்பர் மார்க்கெட்டை விட்டு வெளியேறும் போது, அவரை எதிர்கொண்ட நபர் ஒருவர் அப்பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
பின்னர் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் Henri Mondor மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தாக்குதல் மேற்கொண்டது அப்பெண்ணின் முன்னாள் கணவர் என தெரிவிக்கப்படுகிறது. அவர் தேடப்பட்டு வருகிறார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரைணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 14 times, 1 visits today)