சிங்கப்பூரில் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி

சிங்கப்பூரில் பணிபுரிந்த 23 வயதான வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த மாதம் 2XU கம்ப்ரெஷன் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டு ஓடிய பின்னர் திடீரென உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சிங்கப்பூரில் பணிபுரிந்த இந்தோனேசியரான லியோனார்ட் தர்மவன் என தற்போது அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், ஜூரோங் தீவில் உள்ள சிங்கப்பூர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் செயல்முறை பொறியாளராக அவர் பணிபுரிந்துள்ளார்.
ஏப்ரல் 27 அன்று காலை 6:19 மணியளவில், ஓட்டம் தொடங்கிய இரண்டு மணி நேரத்தில், லியோனார்ட் 19 கி.மீ தூரத்தை கடந்த பிறகு தரையில் படுத்ததாகவும், ஆனால் சுயநினைவுடன் மற்ற ஓட்டப்பந்தய வீரர்களுடன் அவர் உரையாடியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
பின்னர், அங்கு இருந்த ஒருவரால் அவருக்கு CPR என்னும் இருதய புத்துயிர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை துணை மருத்துவர்கள் அவருக்கு மீண்டும் முதலுதவி செய்து, சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், காலை 8:01 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டது. அவருக்கு மேலாக காணக்கூடிய காயங்கள் எதுவும் இல்லை என்றும், இதில் எந்த சதிச்செயலும் இல்லை என்றும் பொலிஸார் உறுதி செய்தனர்.
அவர் இருதய சுவாசக் கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளதாக இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தோனேசிய ஊழியரின் உடல் ஜகார்த்தாவிற்கு அனுப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.