சிங்கப்பூரில் இலஞ்சம் வழங்கிய வெளிநாட்டு ஊழியருக்கு நேர்ந்த கதி

சிங்கப்பூரில் இலஞ்சம் வழங்கிய இந்திய நாட்டவருக்கு 15,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பன்னீர்செல்வம் ஏழுமலை என்பவர் தனது நிறுவனத்திற்கு குத்தகை ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக காண்டோமினிய கூட்டுரிமை மேலாளருக்கு தொடர்ச்சியான இலஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, அவர் காண்டோமினிய கூட்டுரிமை வீட்டின் வாகனம் செல்லும் பாதைக்கான தரை கற்களை மாற்றுவதற்கான டெண்டர் என்னும் குத்தகையை பெற்றுள்ளார்.
ஆனால், டெண்டர் பணிகள் முடிந்த ஒரு வாரத்திலேயே அந்த வாகனப் பாதையில் இருந்து வண்ணப்பூச்சு உரிந்து வர தொடங்கியதாகவும், மேலும் தரையில் போடப்பட்ட கற்களிலும் விரிசல்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்சம் தொடர்பான குற்றத்தை ஒப்புக்கொண்ட 41 வயதான அவருக்கு 15,000 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் அவரின் தண்டனையின் போது பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.