யாழில் கட்டிலிலிருந்து கீழே விழுந்த 4 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணத்தில் கட்டிலிலிருந்து கீழே விழுந்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.
நேற்றிரவு தனது அறையில் உறங்கிக்கொண்டிருந்தவர் கட்டிலிலிருந்து கீழே விழுந்துள்ளார்.
அவர் மயங்கிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





