பாரிஸில் மெட்ரோ ரயிலில் பாட்டு பாடிய 8 பேருக்கு நேர்ந்த கதி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மெட்ரோ ரயிலில் யூத எதிர்ப்பு பாடல் பாடியல் எட்டுப்பேர் கொண்ட குழு கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 தொடக்கம் 17 வயதுடைய எட்டுப்பேர் இம்மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பயணி ஒருவர் அண்மையில் சமூகவலைத்தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில் சிறுவர்கள் சிலர் மெற்றோவில் வைத்து யூத எதிர்ப்பு பாடல்களை பாடியுள்ளார்கள்.
அதனை காணொளியாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதை அடிப்படையாக கொண்டு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற சரியான திகதி குறித்தும், கைது செய்யப்பட்டவர்களின் மேலதிக விபரங்கள் குறித்தும் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
(Visited 11 times, 1 visits today)