வட அமெரிக்கா

ட்ரம்பின் தீர்மானத்தால் 8 நாடுகளுக்கு நேர்ந்த கதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவெடுத்துள்ளமையானது பல நாடுகளை பல்வேறு ரீதியில் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உதவிகளை இடைநிறுத்துவதற்கு ட்ரம்ப் முடிவெடுத்தமையினால் உலகளாவிய ரீதியில் உள்ள 8 நாடுகளில் எச்.ஐ.வி சிகிச்சைகளை வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்படும் எனச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஹைட்டி, கென்யா, தெற்கு சூடான், மாலி, நைஜீரியா மற்றும் யுக்ரேன் உள்ளிட்ட எட்டு நாடுகள் இவ்வாறு பாதிக்கப்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

குறித்த நாடுகளில் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் தீர்ந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எச்.ஐ.வி தொற்றால் ஏற்படும் பாதிப்பினால் எதிர்வரும் 20 வருடங்களுக்கான முன்னேற்றம் பாதிக்கப்படும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் பெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

இதனால், 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவதுடன், மூன்று மில்லியனுக்கும் அதிகமானோர் எச்.ஐ.வி தொற்றினால் உயிரிழக்க நேரிடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா தற்போது வெளிநாட்டு உதவிகளை இடைநிறுத்தியதைத் தொடர்ந்து எச்.ஐ.வி, போலியோ, மலேரியா மற்றும் காசநோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

(Visited 24 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்