ஐரோப்பிய நாடொன்றின் எல்லையில் சிக்கிய 5 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் செல்ல முயன்ற இலங்கையர்கள் ஐவர் லத்வியா எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் எல்லைக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையர் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் சோதனையின் போது இந்தக் குழு கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இலங்கையர்களுக்கு லத்வியா வதிவிட விசா இருந்ததாகவும் அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் கீழ் அவர்களுக்கு இரண்டு முதல் எட்டு வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
(Visited 6 times, 1 visits today)