செய்தி விளையாட்டு

ஓய்வை அறிவித்த பிரபல இங்கிலாந்து வீரர்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 700 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முத்தையா முரளீதரன் (800), வார்னே (708) ஆகியோருக்கு அடுத்தப்படியாக இவர் உள்ளார்.

இந்நிலையில் ஓய்வு முடிவு குறித்து ஆண்டர்சன் உருக்கமாக பேசியதாவது:-

இந்த கோடைக்காலத்தில் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடும் டெஸ்ட் போட்டியே எனது கடைசி போட்டி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கிலாந்து அணிக்காக விளையாட முடியாது என்பதை நினைத்து வருந்துகிறேன். ஆனால் ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் இதுதான் என நான் நினைக்கிறேன். என்னுடைய கனவை போல் மற்றவர்களின் கனவுகளும் நனவாகட்டும்.

(Visited 27 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி