அரை இறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்ற இங்கிலாந்து அணி!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் விறுவிறுப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும், அமெரிக்கா அணியும் பார்படாஸில் உள்ள கேனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து அமெரிக்கா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அமெரிக்கா அணி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து 18.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அமெரிக்க அணியில் அதிகபட்சமாக என்.ஆர்.குமார் 30 ரன்கள் மட்டுமே எடுத்தார். இங்கிலாந்து அணியில் கிறிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதுவும் ஒரே ஓவரில் இந்த 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர், மேலும், அதில் ஹாட்ரிக்கும் அடங்கும்.
அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி இலக்கை எடுக்க பேட்டிங் களமிறங்கியது. இந்த எளிய இலக்கான 116 ரன்களை 10.2 ஓவர்களுக்குள் அடித்தால் இங்கிலாந்து அணி அரை இறுதிக்குள் தகுதி பெறுவார்கள் என கணிதங்களால் கூறப்பட்டது.
அதன்படி அதிரடியுடன் தொடங்கிய இங்கிலாந்து அணி அமெரிக்கா அணியின் பந்து வீச்சை விக்கெட்டுகளை இழக்காமல் பறக்கவிட்டது. அதிலும் ஜோஸ் பட்லர் 38 பந்துக்கு 83* ரன்கள் எடுத்து வெற்றிக்கு முழு முனைப்புடன் செயல்பட்டார்.
இதனால், 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களுக்குள் இந்த இலக்கை எடுத்து வெற்றி பெற்றது. இதனால், இந்த டி20 உலகக்கோப்பை தொடரை முதல் அணியாக அரை இறுதி சுற்றுக்குள் தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.