இலங்கை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட இங்கிலாந்து அணியின் வீரர்!

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் டெஸ்ட் வீரர் இயன் பெல் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 16 முதல் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடியும் வரை இலங்கை அணியுடன் இணைந்து பணியாற்றுவார் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இங்கிலாந்து அணிக்காக 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பெல், 7727 ரன்கள் எடுத்துள்ளார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் ஆகஸ்ட் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
(Visited 42 times, 1 visits today)