ஐரோப்பா செய்தி

நிதி அழுத்தங்களால் ஏற்படும் விளைவு : இங்கிலாந்தில் குறைவடைந்துள்ள குழந்தை பிறப்பு விகிதம்!

அரசாங்க தரவுகளின்படி, பதிவுகள் தொடங்கியதிலிருந்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கருவுறுதல் விகிதம் மிகக் குறைந்த நிலையில் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு பெண்ணின் வாழ்நாளில் பிறந்த குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை 2023 இல் ஒரு பெண்ணுக்கு 1.44 வீதமாக இருந்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.

இது 1938 இல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து இது மிகக் குறைந்த மதிப்பாகும். சுமார் 591,072 நேரடி பிறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ONS இன் மக்கள்தொகை சுகாதார கண்காணிப்பு தலைவர் கிரெக் சீலி மொத்த கருவுறுதல் விகிதங்கள் 2023 இல் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

“வெவ்வேறு வயதுடைய பெண்களிடையே கருவுறுதல் விகிதங்களை இன்னும் விரிவாகப் பார்த்தால், 20-24 மற்றும் 25-29 வயதிற்குட்பட்டவர்களில் கருவுறுதல் விகிதங்களின் சரிவு மிகவும் வியத்தகு முறையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிதி அழுத்தங்கள் மற்றும் சரியான துணையைக் கண்டுபிடிக்காதது ஆகியவை குழந்தைகளைப் பெற பெண்கள் ஆர்வம் இன்றி இருப்பதை காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 28 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி