பிரித்தானியாவில் தொழிலாளர், மாணவர் விசாவிற்கான கட்டுப்பாடுகளால் ஏற்படும் பேரிழப்பு!
பிரித்தானியாவில் தொழிற்கட்சியினரால் முன்மொழியப்பட்ட குடியேற்ற கட்டுப்பாடுகளால், இங்கிலாந்து பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்படும் என்று உள்துறை அலுவலக மதிப்பீடு சுட்டிக்காட்டியுள்ளது.
பொருளாதாரமானது £4.4 பில்லியன் வரை பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பட்டதாரி மாணவர்களுக்கான படிப்புக்குப் பிந்தைய தங்குதலை இரண்டு ஆண்டுகளில் இருந்து 18 மாதங்களாகக் குறைத்தல் மற்றும் திறமையான தொழிலாளர் விசாக்களுக்கான ஆங்கில மொழித் தேவையை அதிகரித்தல் ஆகியவை தொழிற்கட்சியனரால் முன்மொழியப்பட்ட குடியேற்ற கொள்கைகளில் முக்கியமானவையாகும்.
இந்த மாற்றங்கள் ஆண்டுதோறும் 11,000 முதல் 15,000 சர்வதேச மாணவர்களைத் தடுக்கும் என்றும், பட்டதாரி விசா விண்ணப்பங்களை ஆண்டுக்கு 16,000 ஆகக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டங்களால் பொருளாதார இழப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழக நிதியுதவி மற்றும் உலகளாவிய திறமையாளர்களை ஈர்ப்பதில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.





