இலங்கையின் தொழிலாளர் சந்தையில் இளைஞர்களின் பங்களிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி!

இலங்கையில் பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பலர் (42 சதவீதமானோர்) 10 ஆம் வகுப்பு வரை மாத்திரமே படித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 26.7 சதவீத மக்கள் மட்டுமே உயர்நிலைக்கு மேல் தகுதிகளைக் கொண்டுள்ளனர் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை (DCS) தெரிவித்துள்ளது.
மொத்த வேலை செய்யும் நபர்களில் 62.4 சதவீதம் பேர் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என்றும், 15.3 சதவீதம் பேர் மட்டுமே 20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கூறுகிறது,
இது இலங்கையில் தொழிலாளர் சந்தையில் இளைஞர்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது என்பதை இந்த தரவுகள் எடுத்துக் காட்டுகின்றன.
(Visited 3 times, 3 visits today)