இலங்கை

ஊசியால் இளம் பெண் மரணம்; ஐவரடங்கிய குழு இன்று விஜயம்

பேராதனை வைத்தியசாலையில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்ட பின்னர் இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான ஐவரடங்கிய குழு இன்று (15) வைத்தியசாலைக்கு விஜயம் செய்து விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

சில தினங்களில் சம்பந்தப்பட்ட குழு விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கையை சமர்ப்பிக்கும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

கண்டி பொத்துபிட்டிய அலகல்ல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சாமோதி சந்தீபனி ஜயரத்ன என்பவர் வயிற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த 11ம் திகதி பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மருந்துகள் ஊசி மூலம் ஏற்றப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உடல்நிலை ஓரளவு சீராக இருந்த இளம்பெண், ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்ட பிறகு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த பேராதனை வைத்தியசாலையின் பணிப்பாளர், பெண் மரணம் மருந்தினால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படவில்லை எனவும், ஒவ்வாமை காரணமாக மரணமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்