வயிற்றுவலியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு : தமிழர் பகுதியில் சோகம்!

கிளிநொச்சியை பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இரண்டரை வயது குழந்தையின் தாயான இந்துஜன் பானுசா (வயது 20) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 25ம் திகதி இரவு வயிற்று வலி காரணமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 13 times, 1 visits today)