கண் சத்திர சிகிக்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் உயிரிழப்பு – இலங்கையில் சம்பவம்!
கொழும்பில் உள்ள தேசிய கண் வைத்தியசாலையில் சத்திரி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒருவர் நேற்று (ஜுலை 06) உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
சத்திரசிகிச்சைக்கு முன்னர், மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் ஏற்பட்ட சில சிக்கல்களால் குறித்த மரணம் சம்பவித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை அண்மைக்காலமாக இலங்கையில் மயக்க மருந்து கொடுக்கப்படுவதனால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளன.





