80 ஆண்டுகளுக்குப்பின் கலிபோர்னியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து
மெக்சிகோவின் பசிபிக் கரையைத் தாண்டிச் செல்லும் ஹிலரி சூறாவளி இன்று கலிபோர்னியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 80 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக அந்த மாநிலம் வெப்பமண்டலச் சூறாவளியைச் சந்திக்கிறது.
ஹிலரி அசுரவேகச் சூறாவளியாக உருவெடுத்துள்ளது. மணிக்குச் சுமார் 230 கிலோமீட்டர் வேகத்தில் கடலுக்குமேல் நகர்கிறது.
தென்கலிபோர்னியாவை அடைவதற்குமுன் சூறாவளி சற்று மெதுவடையலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
புயல் வீசும்போது நீண்டநேரத்துக்குக் கனத்த மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
பலத்த காற்றும் மண்சரிவும் ஏற்படலாம். கட்டடங்களுக்கு வெளியே மணல்மூட்டைகள் வைக்கப்படுகின்றன.
காற்றின் திசையால் தென்கலிபோர்னியா சூறாவளிகளால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.
எதிர்வரும் சூறாவளியைச் சமாளிக்க அது முன்னெச்சரிக்கைகளை எடுக்கிறது.