பிரித்தானியாவில் சாமானிய மக்களுக்கு வீடுகளை கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி!
பிரித்தானியாவில் வீடுகளின் விலை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. இதன்படி கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 299,862 பவுண்ட்ஸாக விலை உயர்வு பதிவாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
செப்டம்பர் மாதம் 0.3 சதவீதம் சரிவை சந்தித்ததை தொடர்ந்து அக்டோபரில் 0.6 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
வீட்டு விலை வளர்ச்சியின் வருடாந்திர வீதமும் அதிகரித்துள்ளது. இதற்கமைய செப்டம்பரில் 1.3% ஆக இருந்த விலை உயர்வானது ஒக்டோபரில் 1.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள Halifax இன் அடமானத் தலைவர் அமண்டா பிரைடன் (Amanda Bryden) ஜனவரி மாதத்தை விட ஒக்டோபரில் 1,647 பவுண்ட்ஸ் உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
“பலருக்கு மலிவு விலை ஒரு சவாலாகவே உள்ளது என்பதில் சந்தேகமில்லை. சராசரி நிலையான அடமான விகிதங்கள் தற்போது 4% ஆக உள்ளன. இது மேலும் குறைய வாய்ப்புள்ளது, ஆனால் சொத்து விலைகள் சாதனை அளவில் உயர்வடைந்து செல்வதால் வீடுகளை கொள்வனவு செய்வதில் தாமதங்கள் ஏற்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.




