இலங்கை செய்தி

மீண்டும் நாட்டை அதாளபாதளத்திற்கு கொண்டு செல்லமுடியாது – அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்

இக்கட்டான சூழ்நிலை தற்போதைய ஜனாதிபதி தான் ஆட்சியை பொறுப்பெடுத்தார் விமர்சனங்கள் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் முடிந்த அளவு சேவைகளை செய்து கொண்டிருக்கின்றார். இந்த நிலைமையில் குழப்பங்களை ஏற்படுத்தி மீண்டும் அதாளபாதளத்திற்கு கொண்டு செல்லமுடியாது என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மக்கள் நலன்சார்ந்த வகையிலேயே இம்முறை வரவு செலவு திட்டம் வெளியிடப்படும் எனவும் இதன்போது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இதன்போது தெரிவித்தார்.

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,நாடு ஒரு பொருளாதார வீழ்ச்சியை கண்டு படிப்படியாக மேலே வந்தாலும் இன்னும் விலைகள் குறைக்கப்படவில்லை சில இடங்களில் விலைகள் குறைக்கப்பட்டாலும் அது வர்த்தக நிலையங்களில் குறைக்கப்படவில்லை, எது எவ்வாறாக இருந்தாலும் வருகின்ற வருடம் ஒரு தேர்தலுக்கு அரசாங்கம் முகம் கொடுக்கப் போகின்றது ஒன்றோ இரண்டோ தேல்தல் நடக்கலாம். அது எந்த தேர்தலாகவும் இருக்கலாம்.

மக்கள் மத்தியில் செல்வதாக இருந்தால் மக்களின் நல் அபிப்பிராயங்களை சம்பாதிக்க வேண்டும். மக்களுக்கான நலன் நோன்பு திட்டத்தை முன்னெடுத்தால் மாத்திரம் தான் அதனை பெற்றுக் கொள்ள முடியும். அதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்துகின்றது. இந்த வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்து இருக்கும் என நான் நினைக்கின்றேன்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி வருமானம் போதியதாக இல்லை என்கின்ற காரணத்தினால் பல வைத்தியர்கள் தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். சிலர் இன்னும் வெளியேறுகின்றனர், இது சுகாதாரத் துறைக்கு ஒரு பேரிடியாக அமைகின்றது; வைத்தியசாலைகளில் வைத்திய தட்டுப்பாடு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

வைத்திய சங்கம் சிலர் எனது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர் . அவர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கை வரியை குறைக்க வேண்டும் அவர்கள் மீது உள்ள வரி வைத்தியர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.
இன்று ஐந்து வைத்தியர் செய்யும் வேலையை ஒரு வைத்தியர் செய்யும் நிலைமை காணப்படுகின்றது. வைத்தியர்களுக்கு உரிய வரி குறைப்பு என்பது முக்கியமானது. மற்றும் தாதிமார், சுகாதார துறையோடு சேர்ந்தவர்கள் அத்தியாவசிய சேவை வழங்கும் உத்தியோகத்தர்களுக்கு இந்த வரிச் சுமையை குறைத்தாக வேண்டும். அவர்களுக்கான சில நல்ல திட்டங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் திட்டங்கள் போன்றவற்றில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான அழுத்தங்களை நாமும் கொடுக்கின்றோம் இந்த துறைகள் வீழ்ச்சி அடைந்தால் அது மக்களுக்கு பெரும் பாதிப்பாக அமையும்.

எதிர்க்கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர் பாராளுமன்றத் தேர்தல் வேண்டும் என்று. அவர்களுக்கு தெரியும் இப்பொழுது நாடு குழம்பி உள்ளது நாட்டு மக்கள் அதிருப்தியில் உள்ளனர் இந்த நேரம் தேர்தல் வைத்தால் அவர்கள் வென்று விடுவார்கள் என்று.
ஆளும் கட்சியில் இருந்து கொண்டு தேர்தல் வேண்டும் என கேட்கின்றவர்கள் யார் எனப் பார்த்தால்; அதுவும் பாராளுமன்றத் தேர்தல் கேட்கின்றவர்கள் யார் என்று பார்த்தால் – நல்ல பணம் படைத்தோர் தான் முதலில் அவர்களை விசாரணை செய்ய வேண்டும்.

நாட்டில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால் மாகாண சபை தேர்தலை நடத்தலாம். மாகாண சபையின் காலம் முடிந்து பல காலம், உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்தலாம் அதன்பின் ஜனாதிபதி தேர்தலை நடத்தலாம் அதைப் பற்றி சிந்திக்கலாம்; நான் இதை ஏன் சொல்கின்றேன் என்றால் இதை சிலர் குழப்புகின்றனர்.

நான் ஆளும் கட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சிக்கு ஆதரவானவன் இல்லை, எதிர்க்கட்சிக்கும் ஆதரவானவன் இல்லை. எனது மக்களுக்கு நான் ஆதரவானவன்.

இக்கட்டான சூழ்நிலை தற்போதைய ஜனாதிபதி தான் ஆட்சியை பொறுப்பெடுத்தார் விமர்சனங்கள் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் முடிந்த அளவு சேவைகளை செய்து கொண்டிருக்கின்றார்.

இருந்தாலும் முழுமையாக அந்த பிரச்சினை முடியவில்லை இந்த நேரத்தில் குழப்பத்தை உண்டு பண்ணி பிரச்சினையை உண்டு பண்ணி மீண்டும் நாட்டில் ஏற்கனவே இருந்த அகல பாதாளத்திற்கு கொண்டு போக முடியாது.

வீர வசனம் பேசும் கொழும்பில் உள்ள அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அரச பாடசாலைகளிளா கல்வி கேட்கின்றனர் இல்லை. மக்களுக்காகத்தான் அரசாங்க மக்கள் நலன் சார்ந்த சிந்திக்க வேண்டும்.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை