சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய சீன கும்பல் – தீவிர விசாரணையில் பொலிஸார்
சிங்கப்பூரில் அண்மையில் நடந்து வரும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டு கும்பலைச் சேர்ந்த சீன குடிமக்களுக்கும் தொடர்பு இருக்கலாமென சிங்கப்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தில் மூவரைக் பொலிஸார் இதுவரை கைதுசெய்துள்ளனர். அவர்கள்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
விசாரணைகளில் உதவக்கூடிய 14 சீனர்களைக் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் அவர்கள் இப்போது சிங்கப்பூரில் இல்லை என தெரியவந்துள்ளது.
அவர்களைக் கண்டுபிடிக்க சிங்கப்பூர்க் பொலிஸார் சீன அதிகாரிகளோடு பணியாற்றி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் முதல் இம்மாதம் 4ஆம் திகதி வரை நடந்த வீடுபுகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களில் பெரும்பாலானவை தனியார் குடியிருப்பு வட்டாரங்களில் நடந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட வீடுகள் Rail Corridor பகுதிளையும் புக்கிட் தீமா சாலைப் பகுதியில் இருக்கும் தனியார் குடியிருப்பு வட்டாரங்களையும் சேர்ந்தவை. அந்தக் காலக்கட்டட்தில் 10 சம்பவங்கள் புகார்கள் பதிவாயின.