அமெரிக்காவில் எஃகு மற்றும் அலுமினியத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றம்!
எஃகு மற்றும் அலுமினியத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
அமெரிக்கவிற்கு தேவையான எஃகு மற்றும் அலுமினியத்தை அதிகளவில் வழங்கும் நாடாக கனடா முன்னணி வகிக்கிறது. 60 வீதம் கனடாவே வழங்குகிறது.
இந்நிலையில் டிரம்ப் அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்துள்ளார். குறித்த வரி இன்று முதல் அமுலுக்கு வருகிறது.
இது அமெரிக்க உற்பத்தியை அதிகரிக்கும் என்று டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.
ஆனால், எஃகு மற்றும் அலுமினியத்தை பயன்படுத்தி பொருட்களை தயாரிக்கும் அமெரிக்க நிறுவனங்கள், இந்த கட்டணங்கள் விலையை உயர்த்தும் என எச்சரித்துள்ளன.





