இலங்கையில் பொது போக்குவரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!
இலங்கையில் பொது போக்குவரத்து சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 3 மாதங்களுக்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதற்கமைய பல்வேறு உலக நாடுகளில் காணப்படுவதைப் போன்று கியூ.ஆர். அட்டை மூலம் பொது போக்குவரத்துகளில் கட்டண அறவீட்டு முறைமை அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உலகின் பல நாடுகளிலும் பொதுப் போக்குவரத்துக்களில் கட்டணம் அறவிடும் முறைமை டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான நாடுகளில் சாரதிகள் மாத்திரமே இருப்பர். பேரூந்துகளில் நடத்துனர்கள் இருப்பதில்லை. கியூ.ஆர். அட்டை ஊடான கொடுக்கல் வாங்கலே காணப்படுகிறது.
எனவே நாம் போக்குவரத்து அமைச்சு என்ற ரீதியில் இவ்வாறான முறைமை தொடர்பில் ஆர்வத்தின் வெளிப்பாட்டைக் கோரியுள்ளோம்.
அதற்கமைய இலங்கையில் போக்குவரத்து சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான யோசனைகள் கோரப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளது.