மியான்மர் நாட்டை உலுக்கிய நிலநடுக்கத்திற்கான காரணம் வெளியானது
மியான்மர் நாட்டின் நிலப்பரப்புக்கு அடியில் உள்ள இந்தியா-யுரேஷியா என்ற அடர்த்தியான பாறைத் தகடுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதால், மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்திய நிலநடுக்கவியல் நிபுணர்கள் இந்த விடயத்தை கண்டுபிடித்துள்ளனர்.
குறிப்பாக, பாறைத் தகடுகளுக்கு இடையிலான அடர்த்தி குறைந்த மணல் பகுதி நிலத்தடி நீர் சேர்ந்ததால் அதிக நெகிழ்வுத்தன்மை கொண்டதாக மாறியதால் பாதிப்பு அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், மியான்மரில் நிலநடுக்கத்தை தாங்கக்கூடிய வகையில் கட்டங்கள் கட்டப்படுவதில்லை.
இதனால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்து உயிரிழப்பும், பொருள் சேதமும் அதிகமாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்





