30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து! 26 பேர் படுகாயம்
தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பூண்டலு ஓயா, துனுகெதெனிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 26 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. பேருந்து கிட்டத்தட்ட 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
பேருந்தில் பயணித்த காயமடைந்த 26 பெண்களும் சிகிச்சைக்காக கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
விபத்தில் படுகாயமடைந்த பலர் பின்னர் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்
பேருந்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பூண்டலு ஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





