இலங்கை செய்தி

பொலிஸாருக்கு அறிவிக்காமல் புதைக்கப்பட்ட சடலம்!! திடீரென தோண்டியெடுப்பு

வாகன விபத்தில் படுகாயமடைந்து வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த நபரின் புதைக்கப்பட்ட சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

கொடுன்ன எல்ல பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடைய ஒருவரின் சடலமே இவ்வாறு தோண்டப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி, எல்ல பசறை வீதியின் 7 ஆம் கஸ்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி ஜூலை 8 ஆம் திகதி அவர் தனது வீட்டில் உயிரிழந்தார்.

பின்னர், இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்காமல், இறந்தவரின் உடலை அவரது உறவினர்கள் ஜூலை 09 அன்று கொடுன்ன பொது மயானத்தில் அடக்கம் செய்தனர்.

இதன்படி, பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் உண்மைகளை அறிவித்ததையடுத்து, நேற்று பண்டாரவளை நீதவான், பதுளை போதனா வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியர் மற்றும் உயிரிழந்தவரின் உறவினர்கள் அடங்கிய குழுவினர் சடலத்தை தோண்டி எடுத்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 16 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை