யாழில் வீதியொன்றுக்கு அருகில் கிடந்த பெண்ணின் சடலம் – குழப்பத்தில் பொலிஸார்

யாழில் வீதியொன்றுக்கு அருகில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், ஸ்டெல்லி மாவத்தையில் இந்த இனந்தெரியாத பெண்ணின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
65 வயது மதிக்கத்தக்க 05 அடி 05 அங்குல உயரமும், மெல்லிய உடலும் கொண்ட பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் பழுப்பு நிற சேலை அணிந்திருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
(Visited 25 times, 1 visits today)