மெக்சிகோ எல்லையில் வாகனம் ஒன்றுக்குள் இருந்து 10 பேரின் சடலங்கள் மீட்பு!

வடக்கு மெக்சிகோ எல்லை மாநிலமான நியூவோ லியோனில் உள்ள ஆய்வாளர்கள் வாகனம் ஒன்றுக்குள் இருந்து 10 பேரின் சடலங்களை மீட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மான்டேரிக்கு வெளியே உள்ள பெஸ்குவேரியா பகுதியில் எரிந்த நிலையில் காணப்பட்ட வாகனம் ஒன்றுக்குள் இருந்து ஒரு உடலையும் மூன்று மண்டை ஓடுகளையும் முதலில் கண்டுபிடித்ததாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
குறித்த 10 பேரும் எப்படி உயிரிழந்துள்ளார்கள் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள், எப்படி இறந்தார்கள் என்பதைத் தீர்மானிக்க விசாரணைகள் நடந்து வருகின்றன.
(Visited 29 times, 1 visits today)