ஐரோப்பா

AIயின் வருகை : இங்கிலாந்து தொழிற்சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

செயற்கை நுண்ணறிவின் (AI) விரைவான முன்னேற்றம் காரணமாக, குறிப்பிடத்தக்க வேலை இழப்பிற்கு இங்கிலாந்து தயாராக இருக்க வேண்டும் என இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி (Andrew Bailey) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொழில்துறை புரட்சியின் போது ஏற்பட்ட சமூக மாற்றங்களையும், AI வருகையின் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் ஒப்பிட்டு பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது பாரிய வேலையின்மையை ஏற்படுத்தவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் AI-யுடன் தொடர்புடைய பயிற்சி, கல்வி மற்றும் திறன்களைக் கொண்ட நபர்கள் வளர்ந்து வரும் வேலை சந்தையில் வேலைவாய்ப்பைப் பெறுவது எளிதாக இருக்கும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

இதற்கிடையே மைக்ரோசாப்ட் ஆய்வு AI-யால் ஆபத்தில் உள்ள வேலைகளை அடையாளம் கண்டுள்ளது.

இதில் உரைபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் (98 சதவீதம்), வரலாற்றாசிரியர்கள் (91 சதவீதம்), கணிதவியலாளர்கள் (91 சதவீதம்), எழுத்தாளர்கள் (85 சதவீதம்) மற்றும் பத்திரிகையாளர்கள் (81 சதவீதம்) தங்கள் வேலைகளை இழக்க நேரிடலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!