நைஜர் நாட்டை கைப்பற்றியது இராணுவம்

நைஜர் அரசாங்கத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது.
நைஜர் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு முற்றாக சீல் வைக்க இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நைஜர் நாட்டின் கர்னல் மேஜர் அமடு அப்த்ரமனே உட்பட 9 இராணுவத் தலைவர்கள் அடங்கிய குழு, அரசு தொலைக்காட்சியில் மக்களிடம் உரையாற்றி, ஜனாதிபதி தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்ததாக அறிவித்தது.
மறு அறிவித்தல் வரை எல்லைகள் மூடப்பட்டு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என இராணுவத் தளபதிகள் அறிவித்துள்ளனர்.
நாட்டில் தொடர்ந்தும் பாதுகாப்பு சீர்குலைவு, பலவீனமான பொருளாதார மற்றும் சமூக நிர்வாகத்தை கருத்தில் கொண்டு ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதி தீர்மானித்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
(Visited 46 times, 1 visits today)