அரபு நாடுகள் ஒற்றுமையாக செயற்படுவது அவசியம் குறித்து அரபுலீக் மாநாட்டில் வலியுறுத்தல்!
பிராந்தியப் பிரச்சினைகளைத் தீர்ப்பத்தில் அரபு நாடுகள் ஒற்றுமையாக செயற்படுவது அவசியம் என அரபு லீக் உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட ‘ஜெத்தா பிரகடனத்தில்’ கோரப்பட்டுள்ளது.
அத்துடன் அரபு லீக்கில் சிரியாவை மீண்டும் இணைத்தமைக்கும் இப்பிரகடனம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
அரபு லீக்கின் 32ஆவது உச்சிமாநாடு சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில் நடைபெற்ற நிலையில், ஜெத்தா பிரகடனம்’ வெளியிடப்பட்டது.
குறித்த பிரகடனத்தில், பலஸ்தீனப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரபு சமாதான முன்முயற்சிகளை இப்பிரகடனம் வலியுறுத்தியுள்ளது.
சூடானில் பதற்றத்தை தணிக்கவும், லெபனான் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அவசியமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள அந்நாட்டு ஜனாதிபதியை இப்பிரகடனம் கோரியுள்ளது.
யேமனில் பாதுகாப்ப, ஸ்திரத்தன்மையை ஊக்குவிப்பற்கான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபு லீக் உச்சி மாநாட்டில் பங்குபற்றிய சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தை அரபு நாடுகளின் தலைவர்கள் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.