பாரிஸ் ஒலிம்பிக்கின் நிறைவு விழாவில் சாகசம் செய்யவுள்ள அமெரிக்க நடிகர்

இவ்வருடம் பாரிஸில் ஆரம்பிக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் பிரபல அமெரிக்க நடிகர் டாம் குரூஸ் (Tom Cruise) கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.
62 வயது டாம் குரூஸ் ஒலிம்பிக் கொடியை ஏந்தி வான்குடை சாகசம் செய்யவிருப்பதாக நம்பப்படுகிறது.
அதன் பின்னர் அவர் விமானத்தில் ஏறி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) நகரில் தரையிறங்குவதைக் காட்டும் காணொளி ஒளிபரப்பப்படும் என்று சொல்லப்படுகிறது.
2028ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெறவுள்ளது,இதனால் அமெரிக்க நடிகர் இந்த சாகசத்தை நிகழ்த்த உள்ளதாக நம்பப்படுகிறது.
(Visited 24 times, 1 visits today)