பிரான்ஸ் அரசுக்கும் – இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!
இலங்கை கடற்பரப்பில் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவதை கண்டறிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கையின் கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கும் (MEPASL) பிரான்ஸ் அரசாங்கத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின்படி செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பில் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவதை கண்டறிய முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 5 times, 1 visits today)