7 ஆண்டுக்குப் பின் முடங்கிய அமெரிக்க அரசாங்கத்தின் செயற்பாடுகள்
அமெரிக்க அரசாங்கத்தின் பெரும்பாலான செயற்பாடுகள் முடங்கியுள்ளது.
நிதி ஒதுக்கீடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் எதனையும் எட்டவில்லை.
இந்த நிலையில் 7 ஆண்டுக்குப் பின் செயல்பாடுகள் முடக்கம் கண்டுள்ளன. 1981ஆம் ஆண்டு முதல் 15ஆவது முறையாக அமெரிக்க அரசாங்கம் முடங்கியிருக்கின்றது.
சில மணிநேரத்திற்கு முன் நடந்த வாக்கெடுப்பில் செனட் சபை உறுப்பினர்கள் தற்காலிக மசோதாக்களை ஏற்கத் தவறினர்.
வரவுசெலவு ஒதுக்கீடு முக்கியமாக சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளில் கவனம் செலுத்துகிறது.
அரசாங்க முடக்கம் எத்தனை நாள் நீடிக்கும் என்பது தெரியவில்லை. பல்லாயிரம் பேர் வேலைகளை இழக்க நேரிடும் என்று அஞ்சப்படுகிறது.
முன்னதாக அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் ( முதல் தவணைக்காலத்தில் செயல்பாடுகள் 35 நாளுக்கு முடங்கியிருந்தன.





