இலங்கை

19 கொலைகளைச் செய்ததாக விசாரணை அதிகாரிகளிடம் தங்கல்லே சுதா வாக்குமூலம்

“தங்கல்லே சுதா” என அழைக்கப்படும் நிலந்த குமார கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 7 நாள் தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், தான் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல் மூலம் 19 கொலைகளைச் செய்ததாக விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

மாகந்துரே மதுஷ் உட்பட பல பிரபல குற்றவாளிகளின் கூலிப்படையாக செயற்பட்டதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சந்தேகநபர் கொலைக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியும் உனவடுன பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கூறிய கொலைகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்