இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் – பாட் கம்மின்ஸ் எடுத்த முக்கிய தீர்மானம்
பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25 போட்டிகள் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இரண்டு அணிகளின் ரசிகர்களும் இந்த தொடருக்காக காத்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 2 மாதம் ஓய்வு எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாட இந்த ஓய்வு தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.
1992க்குப் பிறகு முதல் முறையாக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா இந்தியாவை எதிர்கொள்கிறது.
இதனால் தன்னை மீண்டும் உற்சாகப்படுத்த இரண்டு மாத இடைவெளி எடுக்க முடிவு செய்துள்ளார். ஆஸ்திரேலியா அணி அடுத்ததாக ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராகை வைட் பால் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் பாட் கம்மின்ஸ் இடம் பெற மாட்டார்.
“கிரிக்கெட்டில் சிறிது இடைவேளைக்கு பிறகு திரும்பி வரும் வீரர்கள் சற்று புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். இதனால் மீண்டும் சிறப்பாகா விளையாட முடியும். நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து கடந்த 18 மாதங்களாக இடைவிடாமல் பந்துவீசி வருகிறேன். எனவே அதே வேகத்தில் இந்தியாவிற்கு எதிரான தொடரில் களமிறங்க எனக்கு ஏழு அல்லது எட்டு வாரங்கள் இடைவெளி இருந்தால் நன்றாக இருக்கும்.
இந்த ஓய்வில் உங்களால் பந்துவீச்சில் வேகத்தை பராமரிக்க முடியும், மேலும் காயங்கள் வராமல் இருக்கும் படி பார்த்து கொள்ள முடியும்” என்று கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி, ஆஷஸ் தொடர், 2023 ஒருநாள் உலகக் கோப்பை, ஐபிஎல் 2024, டி20 உலகக் கோப்பை 2024 என பாட் கம்மின்ஸ் தொடர்ச்சியாக முக்கியமான தொடர்களில் விளையாட வருகிறார். இதில் தனது 100% அணிக்காக கொடுத்துள்ளார்.
“பார்டர் கவாஸ்கர் கோப்பையை நான் இதற்கு முன்பு வென்றது இல்லை. மேலும் எங்கள் அணியில் உள்ள சிலரும் இதனை வெல்ல ஆர்வமாக உள்ளனர். நாங்கள் டெஸ்ட் தொடரில் கடந்த சில ஆண்டுகளாக சில அற்புதமான விஷயங்களை செய்துள்ளோம். சொந்த மண்ணில் நடக்கும் ஒவ்வொரு தொடரையும் கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்பது எங்கள் மனதில் உள்ளது.
இந்திய அணி அனைத்து பார்மெட்டிலும் சிறப்பாக விளையாடுகிறது. நாங்கள் அவர்களுடன் நிறைய போட்டிகளில் விளையாடி உள்ளோம். இந்திய வீரர்களை எங்களுக்கு நன்கு தெரியும். எனவே ஆஸ்திரேலிய அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாட வேண்டும்” என்று கம்மின்ஸ் கூறினார்.
ஆஸ்திரேலிய அணி 2018-19 மற்றும் 2020-21 நடந்த டெஸ்ட் தொடர்களில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது. இதன் காரணமாக, வரவிருக்கும் பார்டர் கவாஸ்கர் தொடர் இரு அணிகளுக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக உள்ளது.
இந்தியாவின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் (பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024-25)
இந்தியா vs ஆஸ்திரேலியா, 1வது டெஸ்ட்: நவம்பர் 22-நவம்பர் 26, பெர்த்
இந்தியா vs ஆஸ்திரேலியா, 2வது டெஸ்ட்: டிசம்பர் 6-டிசம்பர் 10, அடிலெய்டு
இந்தியா vs ஆஸ்திரேலியா, 3வது டெஸ்ட்: டிசம்பர் 14-டிசம்பர் 18, பிரிஸ்பேன்
இந்தியா vs ஆஸ்திரேலியா, 4வது டெஸ்ட்: டிசம்பர் 26-டிசம்பர் 30, மெல்போர்ன்
இந்தியா vs ஆஸ்திரேலியா, 5வது டெஸ்ட்: ஜனவரி 3-ஜனவரி 7, சிட்னி