பாக்கிஸ்தானில் ரயில் மீது தாக்குதல் நடத்தி சிறைபிடித்த தீவரவாதிகள்!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் நூற்றுக்கணக்கான பயணிகளுடன் சென்ற ரயில் மீது ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி நிறுத்தியுள்ளனர்.
குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பலூச் விடுதலை இராணுவம் (பிஎல்ஏ) இதனை உறுதிப்படுத்தியது.
ரயிலை தாக்குவதற்கு முன்னர் சிபி மாவட்டத்தில் ரயிலை தாக்கும் முன் தண்டவாளத்தில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக பிரிவினைவாத குழுவின் அறிக்கை கூறுகிறது. ரயில் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக அது கூறியது.
இந்த தாக்குதலில் ரயில் ஓட்டுனர் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் போலீசார் உள்ளூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
(Visited 2 times, 1 visits today)